செய்திகள்
கோவில்

கோவில்களின் நில விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு

Published On 2021-06-09 02:32 GMT   |   Update On 2021-06-09 08:55 GMT
முதல் கட்டமாக 3,44,647 ஏக்கர் கோவில் நிலம் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் உள்ள கோவில்களின் நில விவரங்கள் குறித்து இணையதளத்தில் வெளியிடப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்தார். இதையடுத்து கோவில் நிலங்களின் தகவல்கள் இணையதளத்தில் பதிவு செய்யும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்றது. 



தற்போது இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நில விவரங்கள்  https://hrce.tn.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியாகி உள்ளது.


முதல் கட்டமாக 3,44,647 ஏக்கர் நிலம் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்தடுத்து இன்னும் கோவில்களின் நிலங்கள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் இணைக்கப்படும் என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News