செய்திகள்
கொரோனா வைரஸ்

மதுரையில் 14 பேரின் உயிரை பறித்த கொரோனா

Published On 2021-06-07 03:12 GMT   |   Update On 2021-06-07 03:12 GMT
நகர் பகுதியை காட்டிலும் புறநகர் பகுதியில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. எனவே நகர்ப்புறங்களில் நோய் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை:

மதுரையில் கொரோனா பதிப்பு படிப்படியாக குறைந்து வந்தாலும் உயிரிழப்பு அதிகமாக உள்ளது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 14 பேரின் உயிரை கொரோனா பறித்துச் சென்றுள்ளது. 33, 51, 55 வயது ஆண்கள், 40, 31 வயது பெண்கள், 76, 81, 66, 76, 83 வயது முதியவர்கள், 60, 92, 64, 81 வயது மூதாட்டிகள் உயிரிழந்துள்ளனர். மதுரையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 974 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே நேற்று மதுரையில் ஒரே நாளில் 1,569 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றனர். அவர்களுக்கு பல்வேறு கட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், 7 நாட்களுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளும் வழங்கப்பட்டு உள்ளன. இவர்களையும் சேர்த்து நோய் தொற்றில் இருந்து குணமடைந்து வீட்டிற்கு சென்ற நபர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்து 513 ஆக உள்ளது.

இதேபோல் நேற்று புதிதாக 441 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 180 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். தற்போது நகர் பகுதியை காட்டிலும் புறநகர் பகுதியில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. எனவே நகர்ப்புறங்களில் நோய் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி மதுரையில் 11 ஆயிரத்து 443 பேர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கண்காணிப்பு மையங்களில் சிகிச்சையில் உள்ளனர்.
Tags:    

Similar News