செய்திகள்
தற்கொலை

நாமக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி தற்கொலை

Published On 2021-06-03 08:38 GMT   |   Update On 2021-06-03 08:38 GMT
கொரோனா நோயாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாமக்கல் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் யுவராஜ் (வயது42). திருமணமாகி மனைவி கோகிலா, குழந்தைகள் வைஷ்ணவி (7), சுகேந்திரன் (6), சுமித்ரா (4) ஆகியோர் உள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பவானி சிங்கம்பேட்டை யுவராஜியின் சொந்த ஊர் ஆகும். இவர் கடந்த 4 வருடங்களுக்குமேல் நாமக்கல்லில் துடைப்பம் விற்பனை செய்யும் தொழில் செய்ய வந்தார்.

இந்த நிலையில் இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து இவர் கடந்த 1-ந்தேதி நாமக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா பிரிவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இன்று அதிகாலை 3 மணிக்கு குளியல் அறையில் இடுப்பில் கட்டியிருந்த அரணா கயிறை எடுத்து கழுத்தில் மாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து நாமக்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிகிச்சையில் இருந்த கொரோனா நோயாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

Tags:    

Similar News