செய்திகள்
டிடிவி தினகரன்

ஊரடங்கு காலத்தில் வங்கி தவணைக்கு விலக்கு வேண்டும்- டி.டி.வி.தினகரன் கோரிக்கை

Published On 2021-05-30 05:37 GMT   |   Update On 2021-05-30 05:37 GMT
உரிய அழுத்தம் கொடுத்து ஊரடங்கு காலத்தில் வங்கிக் கடன் மாதத் தவணைகளில் இருந்து விலக்கு பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை:

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இத்தனை நாட்கள் ஆன பிறகும் வங்கிக் கடன்களுக்கான மாத தவணையை செலுத்துவதற்கான விதி விலக்குகள் குறித்து ரிசர்வ் வங்கி இதுவரை அறிவிக்காதது கண்டனத்திற்குரியது.

ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலன் கருதி இதனைச் செய்திட வேண்டிய மத்திய அரசும் வேடிக்கை பார்ப்பது நியாயமல்ல. இப்பிரச்சனையில் பிரதமரும், மத்திய நிதி அமைச்சரும் உடனடியாக தலையிட வேண்டும்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் கடிதம் எழுதியதோடு கடமை முடிந்தது என்று இல்லாமல் உரிய அழுத்தம் கொடுத்து ஊரடங்கு காலத்தில் வங்கிக் கடன் மாதத் தவணைகளில் இருந்து விலக்கு பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News