செய்திகள்
கோப்புபடம்

பழைய விலைக்கே உரம் விற்பனை

Published On 2021-05-27 07:18 GMT   |   Update On 2021-05-27 07:18 GMT
மத்திய அரசு உரத்துக்கான மானியத்தை உயர்த்தியுள்ளதால் பழைய விலைக்கே உரம் விற்கப்பட வேண்டுமென திருப்பூர் மாவட்ட வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.
திருப்பூர்:

இந்திய ரூபாய்க்கு எதிரான அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்த நிலையில்  உரம் உற்பத்திக்கான மூலப்பொருள் விலை உயர்ந்துள்ளது:-

தமிழகத்தில் டி.ஏ.பி., காம்ப்ளக்ஸ் மற்றும் பொட்டாஷ் உரங்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.குறிப்பாக டி.ஏ.பி., உரம்  விலை 50 கிலோ மூட்டைக்கு ரூ.700 வரை உயர்ந்துள்ளது.இந்தநிலையில்  விவசாயிகளுக்கு கூடுதல் சுமை ஏற்படுவதை தவிர்க்கும் வகையிலும், விவசாயிகளுக்கு பழைய விலையிலேயே உரம் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட வேளாண்  இணை இயக்குனர் மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மானியம் உயர்த்தப்பட்டுள்ளதால் 50 கிலோ டி.ஏ.பி., உரம் ரூ.1200க்கு விற்கப்பட வேண்டும். உர மூட்டையின் மீதுள்ள விலையை  திருத்தம் செய்தல், கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது , தரமற்ற உரங்களை விற்பது குற்றமாகும்.மீறினால் உரக்கட்டுப்பாட்டு சட்டம் 1985ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News