செய்திகள்
முதலமைச்சர் முக ஸ்டாலின்

ஆன்லைன் வகுப்பின்போது முறையற்று நடப்போர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை - முதலமைச்சர்

Published On 2021-05-26 14:13 GMT   |   Update On 2021-05-26 14:13 GMT
ஆன்லைன் வகுப்பு தொடர்பான புகார்கள் குறித்து துரித நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:

ஆன்லைன் வகுப்பு தொடர்பாக முதலமைச்சர் தரப்பில் கூறியதாவது:-

பள்ளி, கல்லூரிகளில் பாலியல் குற்றங்களை தடுக்க காவல், கல்வியாளர், உளவியல் நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

ஆன்லைன் வகுப்பு தொடர்பான புகார்கள் குறித்து  துரித நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் வகுப்பின்போது முறையற்று நடப்போர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.



மாணவ, மாணவிகள் புகாரை தெரிவிக்க ஹெல்ப்லைன் எண் உருவாக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். சைபர் கிரைம் கண்காணிப்பாளர் நிலையில் உள்ள அலுவலர் புகரை பெற்று நடவடிக்கை எடுப்பார். 
Tags:    

Similar News