செய்திகள்
ரெயில்

கொரோனா பரவல் காரணமாக ரெயில்களில் பயணிகள் வருகை குறைவு

Published On 2021-05-14 11:13 GMT   |   Update On 2021-05-14 11:13 GMT
முழு ஊரடங்கு கொரோனா பரவல் காரணமாக ரெயில்களில் பயணிகள் வருகை குறைந்துள்ளது.
ராமேசுவரம்:

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பஸ், கார், ஆட்டோ உள்ளிட்டவை இயங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சென்னை மற்றும் திருச்சி மேலும் ஒருசில மாநிலங்களில் இருந்தும் ராமேசுவரத்திற்கு வழக்கம்போல் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ராமேசுவரத்திற்கு தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 8 மணிக்கும் சென்னையில் இருந்து வரக்கூடிய 2 ரெயில்களிலும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அனைத்து பெட்டிகளிலும் அதிகமான பயணிகள் இல்லாமல் காலிபெட்டியாகவே வருகின்றன.

சென்னையில் இருந்து ராமேசுவரம் வந்த 2 ரெயில்களிலும் கடந்த 10 நாட்களாக சராசரியாக ஒரு ரெயிலில் 20 அல்லது 30 பேர் மட்டுமே வருகை தருவதாக ரெயில்வே போலீசார் தரெிவித்தனர்.

அதுபோல் திருச்சியில் இருந்து ராமேசுவரம் வரும் பயணிகள் ரெயிலிலும் சராசரியாக 10 முதல் 20 பயணிகள் மட்டுமே வருகை தருவதாக கூறப் படுகிறது. இதேபோல் திருச்சியில் இருந்து நேற்று ராமேசுவரம் வந்த பயணிகள் ரெயிலிலும் 10 பயணிகள் மட்டுமே வருகை தந்தனர். சென்னை மற்றும் திருச்சி ரெயில்களை தவிர்த்து ஓகா, வாரணாசி திருப்பதி உள்ளிட்ட 4 மாநிலங்களில் இருந்தும் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் ராமேசுவரம் வருகின்றன.

இவ்வாறு வெளிமாநிலங்களில் இருந்து ரெயில்களில் வரக்கூடிய பயணி களிடம் வருவாய்த்துறை மற்றும் ரெயில்வே போலீசார் இ- பதிவு சான்றிதழ் முறையாக வைத்துள்ளார்களா என ஆய்வு செய்த பின்னரே ராமேசுவரத்தில் அனுமதிக்கின்றனர். இ-பாஸ் இல்லாமல் வரக்கூடிய பயணிகளை வருவாய்த்துறையினர் பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து தனிமை படுத்துகின்றனர். கொரோனா பரவல் அதிகரிப்பாலும், கோவிலுக்கு பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையால் ராமேசு வரத்திற்கு வரும் அனைத்து ரெயில்களும் காலிபெட்டிகளாகவே வருகின்றன.
Tags:    

Similar News