செய்திகள்
காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை

காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

Published On 2021-05-14 06:39 GMT   |   Update On 2021-05-14 06:39 GMT
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று மாலை நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்திலும் ஊரடங்கை முழுமையாக அமல்படுத்த கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

நேற்று மாலை டி.ஜி.பி. அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், “முழு ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுபவர்கள் மீது தகுந்த சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அரசின் அறிவுரைகளை பொதுமக்களில் சிலர் ஒழுங்காக பின்பற்றாததால் நோய் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது என்றும் எனவே பொதுமக்கள் போலீஸ் நடவடிக்கையில் இருந்து தவிர்த்து கொள்ளுமாறும் அந்த அறிக்கையில் போலீசார் தெரிவித்து இருந்தனர்.



இதையடுத்து இன்று முதல் தமிழகம் முழுவதும் ஊரடங்கை மீறி தேவையில்லாமல் வெளியில் வந்தவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை தொடங்கியது. பல இடங்களில் வாகனங்களில் வெளியில் சுற்றியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனையில் டிஜிபி திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
Tags:    

Similar News