செய்திகள்
அமைச்சர் தங்கம் தென்னரசு

மே 11 முதல் ஸ்டெர்லைட் ஆக்சிஜன் கிடைக்கும்- அமைச்சர் தங்கம் தென்னரசு

Published On 2021-05-09 13:28 GMT   |   Update On 2021-05-09 13:28 GMT
ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் மே 11 ஆம் தேதி முதல் கிடைக்கும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
சென்னை:

அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் பேசியதாவது,

தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஸ்டெர்லைட் மூலம் தமிழகத்திற்கு 31 மெ. டன் ஆக்சிஜன் கிடைக்கும்.

தொழில்துறையினர் மற்றும் வணிகர்களுடன் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் முழு ஊரடங்கிற்கு தொழில்துறையினர் ஒத்துழைப்பு தர வேண்டும். 

தனியார் நிறுவனங்களிடம் ஆக்சிஜன உற்பத்திக்காகவும் அதை பெறுவதற்காகவும் அதிகாரிகள் நியமிக்கப்படுவர். தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க தொழிற்துறை முடுக்கிவிடப்பட்டுள்ளது. வரும் காலகட்டத்தில் ஆக்சிஜன் தேவையை நிவர்த்தி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.
Tags:    

Similar News