செய்திகள்
தமிழக அரசு

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கட்டளை மையம்: 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு

Published On 2021-05-09 10:28 GMT   |   Update On 2021-05-09 10:28 GMT
104 என்ற எண் மூலம் கட்டளை மையத்தினை மக்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பு மற்றும் படுக்கையின் எண்ணிக்கைகளை தெரிந்துகொள்ளலாம்
சென்னை:

கொரனா பரவலை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் கட்டளை மையம் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது கட்டளை மையம் அமைக்கப்பட்டு அதற்கான அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

கொரோனா கட்டளை மையத்திற்கு ஒருங்கிணைப்பாளராக தாரேஷ் அகமத் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கட்டளை மையத்தின் செயல்பாடு, தரம் குறித்து ஆய்வுசெய்ய அழகுமீனா என்ற அதிகாரியும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தக் குழுவில் ஐஏஎஸ் அதிகாரிகள் நந்தகுமார், எஸ்.உமா, எஸ்.வினீத், கே.பி. கார்த்திகேயன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.



மேலும்  104 என்ற எண் மூலம் கட்டளை மையத்தினை மக்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பு மற்றும் படுக்கையின் எண்ணிக்கைகளை தெரிந்துகொள்ளலாம்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News