செய்திகள்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

வியாசர்பாடியில் கொரோனா சிகிச்சைக்கு சித்த மருத்துவ மையம்- அமைச்சர் தகவல்

Published On 2021-05-09 06:33 GMT   |   Update On 2021-05-09 06:33 GMT
குறைந்த அளவு தொற்று உள்ளவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படும். கபசுர குடிநீர் உள்ளிட்ட மூலிகை மருந்துகள் வழங்கப்படும். யோகா, மனநல பயிற்சிகளும் அளிக்கப்படும்.

சென்னை:

கொரோனா முதல் அலையின் போது சென்னையில் சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டு ஏராளமானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் மீண்டும் சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் திறக்கப்படுகிறது.

இதுபற்றி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

சித்த மருத்துவமும் கொரோனாவை கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் திறக்கப்படுகிறது.



குறைந்த அளவு தொற்று உள்ளவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படும். கபசுர குடிநீர் உள்ளிட்ட மூலிகை மருந்துகள் வழங்கப்படும். யோகா, மனநல பயிற்சிகளும் அளிக்கப்படும்.

வியாசர்பாடியை தொடர்ந்து இதே போல் மேலும் 12 இடங்களில் சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் திறக்கப்பட உள்ளது. சிறந்த சித்த மருத்துவர்கள் இந்த மையங்களில் கொரோனா தொற்று எற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News