செய்திகள்
முதலமைச்சர் முக ஸ்டாலின்

கொரோனா சிறப்பு மையத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆய்வு

Published On 2021-05-07 11:19 GMT   |   Update On 2021-05-07 13:04 GMT
ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 360 படுக்கைகள் 10-ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் நிலையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
சென்னை:

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்றவுடன், தலைமைச் செயலகத்திற்கு வருகை புரிந்தார். அவரை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் முதலமைச்சர், தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில் 5 முக்கிய அரசாணைகளைப் பிறப்பித்தார்கள்.

இதனையடுத்து சென்னை வர்த்தக மையத்தில் உள்ள கொரோனா சிறப்பு மையத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆய்வு செய்தார். ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 360 படுக்கைகள் 10-ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் நிலையில் இந்த ஆய்வு நடைபெற்றது.

மேலும் 500 ஆக்சிஜன் படுக்கைகள் 15-ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
Tags:    

Similar News