செய்திகள்
கைது

கள்ளச்சந்தையில் ‘ரெம்டெசிவிர்’ மருந்தை விற்க முயன்ற டாக்டர் கைது

Published On 2021-05-06 02:46 GMT   |   Update On 2021-05-06 02:46 GMT
ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில், தலா ரூ.19 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்வதற்காக காாில் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.
விழுப்புரம்:

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவும் ‘ரெம்டெசிவிர்’ மருந்தை 2 பேர் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே காரில் வைத்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு நேற்று மாலை ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் அங்கு சென்று காரில் இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் செஞ்சி அருகே நாட்டார்மங்கலம் பகுதியில் மருத்துவமனை நடத்தி வரும் புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் ஆச்சார்யாபுரம் பகுதியை சேர்ந்த டாக்டர் விபவதேவர் (வயது 32) என்பதும், மற்றொருவர் விழுப்புரத்தில் மருந்தாளுனராக பணிபுரிந்து வரும் திண்டிவனத்தை சேர்ந்த தெய்வநாயகம் மகன் முத்துராமன் (22) என்பதும் தெரியவந்தது.

இருவரும் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில், தலா ரூ.19 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்வதற்காக காாில் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடம் இருந்து 5 ரெம்டெசிவிர் மருந்து குப்பிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இருவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
Tags:    

Similar News