செய்திகள்
சி.டி.ரவி

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை இனி யாரும் குறை கூறக்கூடாது: சி.டி.ரவி

Published On 2021-05-03 03:53 GMT   |   Update On 2021-05-03 03:53 GMT
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் நல்ல முறையில் இயங்கி இருக்கின்றன. எனவே இனிமேல் யாரும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை குறை கூறக்கூடாது.
சென்னை :

பா.ஜ.க.வின் தமிழக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். மக்களுடைய தீர்ப்பை நாங்கள் மதிக்கின்றோம். அமைய உள்ள புதிய அரசுக்கு எங்களுடைய வாழ்த்துகளை தெரிவிப்பதோடு, எங்களின் ஆதரவும் அவர்களுக்கு இருக்கும்.

இந்த தேர்தலில் பா.ஜ.க.வினர் கடுமையாக உழைத்தனர். அந்த உழைப்பு வாக்குகளாக மாறவில்லை. இருப்பினும், பா.ஜ.க. தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு என்னுடைய வாழ்த்துகள். முன்பைவிட பா.ஜ.க.வினர் இனி அதிகம் உழைக்க வேண்டும்.

கூட்டணி கட்சி தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் நல்ல முறையில் இயங்கி இருக்கின்றன. எனவே இனிமேல் யாரும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை குறை கூறக்கூடாது.

பா.ஜ.க வேல் யாத்திரை மூலம் மக்களின் மனங்களை வெல்ல முயற்சித்தோம். ஆனால் அது நடக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News