செய்திகள்
ஆக்சிஜன்

நெல்லை மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை- கலெக்டர் தகவல்

Published On 2021-04-27 10:15 GMT   |   Update On 2021-04-27 10:15 GMT
அரசு மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் போதுமான அளவு இருப்பு உள்ளதா என்பதையும் தேவை குறித்தும் அறிக்கை எடுத்து கலெக்டரிடம் தெரிவித்திடவும் சிறப்பு குழு அமைக்கப்பட்டது.
நெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள், ஆக்சிஜன் இருப்பு மற்றும் தேவை குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தமிழக அரசு விதித்துள்ள வழிமுறைகள் மாவட்ட நிர்வாகம் மூலம் அமல்படுத்தப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்ற விபரம் தெரிவிக்கப்பட்டது.

மேலும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் போதுமான அளவு இருப்பு உள்ளதா என்பதையும் தேவை குறித்தும் அறிக்கை எடுத்து கலெக்டரிடம் தெரிவித்திட சிறப்பு குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவில் வேளாண்மைத்துறை இணை இயக்குனர், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ஆகியோர் சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் (ஒழுங்கு நடவடிக்கை ஆணையர்) சுகன்யா, சப்-கலெக்டர் (பயிற்சி) மகாலட்சுமி, நாங்குநேரி வட்டார மருத்துவ அலுவலர் வெங்கடேசன், இந்திய மருத்துவ கழக டாக்டர்கள் பிரான்சிஸ்ராய், இப்ராகிம், அன்புராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News