செய்திகள்
கோப்புபடம்

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு விதியை மீறிய 2,000 பேர் மீது வழக்கு

Published On 2021-04-26 08:52 GMT   |   Update On 2021-04-26 08:52 GMT
விழுப்புரம் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்கும் வகையில் 79 இடங்களில் தடுப்பு கட்டைகள் அமைத்து சோதனை செய்யப்பட்டது.

விழுப்புரம்:

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. என்றாலும் ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுகிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு உத்தர விட்டிருந்தது.

அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக விழுப்புரம் மாவட்டத்தில் வணிகநிறுவனங்கள், கடைகள், வியாபார தளங்கள், தியேட்டர்கள், வணிகவளாகங்கள், அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டன.

விழுப்புரம் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்கும் வகையில் 79 இடங்களில் தடுப்பு கட்டைகள் அமைத்து சோதனை செய்யப்பட்டது. அதன்படி மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் ஆகியோரின் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்த சேதனையில் முககவசம் அணியாமல் ஊரடங்கு மிதிகளை சுற்றிதிரிந்த 552 பேர் மீதும் ஊரடங்கு விதியை மீறி இருசக்கர வாகனங்களில் வெளியே வந்த 1,450 ஆகி யோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அதிரடி வேட்டை நடந்து வருகிறது.

Tags:    

Similar News