செய்திகள்
மின்சார ரெயில்

வார நாட்களில் கூடுதலாக 21 மின்சார ரெயில்கள் இயக்கம்

Published On 2021-04-26 02:41 GMT   |   Update On 2021-04-26 02:41 GMT
திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை வேலை நாட்களில் 459 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.
சென்னை:

கொரோனா பரவல் எதிரொலியால் ஏற்கனவே சென்னையில் குறைந்த அளவிலான மின்சார ரெயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. அதற்கான புதிய கால அட்டவணையும் சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டது. அந்தவகையில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை வேலை நாட்களில் 459 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நேரத்தில் மேலும் குறைவான ரெயில்கள் இயக்கப்படுகிறது.



இந்தநிலையில் தற்போது இன்று (திங்கட்கிழமை) முதல் வேலை நாட்களில் கூடுதல் மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படும் என சென்னை ரெயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஆவடி-திருவள்ளூர், ஆவடி-அரக்கோணம், மூர்மார்க்கெட்-ஆவடி, கடற்கரை-திருவள்ளூர், மூர்மார்க்கெட்-அரக்கோணம், மூர்மார்க்கெட்-திருவள்ளூர், அரக்கோணம்-கடற்கரை, திருவள்ளூர்-மூர்மார்க்கெட், ஆவடி-மூர்மார்க்கெட் இடையே தலா ஒரு மின்சார ரெயில் சேவை இயக்கப்படுகிறது.

இதேபோல், கடற்கரை-ஆவடி இடையே 5 மின்சார ரெயில் சேவையும், ஆவடி-கடற்கரை இடையே 3 மின்சார ரெயில் சேவையும், திருவள்ளூர்-கடற்கரை, திருவள்ளூர்-ஆவடி இடையே தலா 2 மின்சார ரெயில் சேவையும் என மொத்தம் கூடுதலாக 21 மின்சார ரெயில் சேவைகள் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை இன்று முதல் இயக்கப்படுகிறது என சென்னை ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News