செய்திகள்
சிக்னல் கம்பத்தின் மீது ஏறிய வாலிபரை போலீசார், தீயணைப்பு வீரர்கள் மீட்ட காட்சி.

பல்லடத்தில் இன்று சிக்னல் கம்பத்தின் மீது ஏறி கீழே குதிக்க முயன்ற வாலிபர்

Published On 2021-04-22 10:12 GMT   |   Update On 2021-04-22 13:16 GMT
சிக்னல் கம்பத்தின் மீது ஏறி கீழே குதிக்கப்போவதாக மிரட்டல் விடுத்த வட மாநில வாலிபரை போலீசார் சாதுர்யமாக செயல்பட்டு பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நால்ரோடு பகுதியில் போக்குவரத்து சிக்னல் உள்ளது. இன்று காலை திடீரென அங்கு வந்த வட மாநில வாலிபர் ஒருவர் திடீரென அந்த சிக்னல் கம்பத்தின் மீது ஏறி கீழே குதிக்க போவதாக கூறினார். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனே இது குறித்து போக்குவரத்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் கீழே குதிக்கப்போவதாக மிரட்டல் விடுத்த  வட மாநில வாலிபரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் கீழே இறங்க மறுத்து விட்டார்.

பின்னர் சாதுர்யமாக செயல்பட்ட போலீசார், தீயணைப்பு வீரர்கள் அந்த வழியாக வந்த லாரியை சிக்னல் அருகே நிறுத்தி, அதன் மேல் ஏறி வாலிபரை பத்திரமாக மீட்டனர். பின்னர் பல்லடம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவரது ஊர், பெயர் விவரம், எதற்காக இதுபோன்ற செயலில் ஈடுபட்டார் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

Similar News