search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வட மாநில வாலிபர்"

    • ஸ்டோனி பாலம் அருகே உள்ள ஓடை பகுதியில் இரவு நேரங்களில் வெளி நபர்கள் அதிக அளவில் வந்து மது அருந்து செல்கின்றனர்.
    • சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து ஒரு சிலரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு ஸ்டோனி பாலம் அருகே மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. மீன் மார்க்கெட் அருகே ஓடை செல்கிறது.

    அதன் அருகே இன்று காலை 40 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் ஒருவர் உடலில் காயங்களுடன் ரத்த கரையில் நிர்வாணமாக இறந்து கிடந்தார். இது குறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டவுன் டி.எஸ்.பி. ஜெய்சிங், சூரம்பட்டி இன்ஸ்பெக்டர் வைரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்து கிடந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நேற்று இரவு ஓடை பகுதியில் ஒரு சிலர் மது அருந்து கொண்டிருப்பது தெரிய வந்தது. அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வட மாநில வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இறந்த நபரின் தலையின் பின்பகுதியில் பலத்த காயம் இருந்தது. இதேபோல் இடது கை மற்றும் இடது கண்ணிலும் ரத்த காயங்கள் இருந்தன.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது:- ஸ்டோனி பாலம் அருகே உள்ள ஓடை பகுதியில் இரவு நேரங்களில் வெளி நபர்கள் அதிக அளவில் வந்து மது அருந்து செல்கின்றனர்.

    இதில் மது அருந்தும் போது அவர்களுக்குள் சில நேரங்களில் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி உள்ளனர். எனவே போலீசார் இரவு நேரங்களில் இந்த பகுதியில் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என்றனர்.

    இந்நிலையில் இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து ஒரு சிலரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல இடங்களில் தேடி பார்த்தும் மீரின்மய் சர்க்கார் கிடைக்கவில்லை.
    • உயர்மின் கோபுரத்தில் தூக்கில் தொங்குவதாக தகவல் கிடைத்தது.

    பெருந்துறை:

    மேற்கு வங்காளம் மாநி லம் சுகேஷ் கன்ச் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாஸ் சர்கார் (வயது 59). இவருடைய மகன் மீரின்மய் சர்க்கார் (26). இவர் கட்டிட வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கணவன், மனைவி இருவரு க்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மீரின்மய் சர்க்கார் குடும்பத்தை பிரி ந்து அவரது நண்பர்களுடன் ஈரோடு மாவட்டம் பெரு ந்துறை பணிக்கம்பாளையம் பகுதியில் வசித்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்த ன்று வீட்டை விட்டு வெளி யேறிய மீரின்மய் சர்க்கார் பின்னர் வீடு திரும்பவில்லை. நண்பர்கள் பல இடங்களில் தேடி பார்த்தும் மீரின்மய் சர்க்கார் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் பணிக்கம்பாளையம் அருகே உள்ள உயர்மின் கோபுரத்தில் தூக்கில் தொங்குவதாக தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அவரது நண்பர்கள் மீரின்மய் சர்க்காரை மீட்டு பெருந்துறை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் மீரின்மய் சர்க்கார் ஏற்க னவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பின்னர் இது குறித்து அவரது தந்தை பிரபாஸ் சர்க்கார் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

    • வாலிபர் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து கொண்டிருந்தார்.
    • கேரளாவில் உள்ள அவரது நண்பருக்கு போலீசார் போனில் தொடர்பு கொண்டு ஈரோடுக்கு வருமாறு கூறினர்.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையத்தில் முன்பதிவு டிக்கெட் கவுண்டர் அறை அருகே ரெயில் டிரைவர்கள் அலுவலகம் உள்ளது. இதன் அருகே 80 அடி உயரத்தில் மின்விளக்கு டவர் உள்ளது. நேற்று மதியம் 2 மணி அளவில் 30 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் ஒருவர் திடீரென அந்த 80 அடி உயர மின்விளக்கு டவரில் வேகமாக ஏறினார்.

    முதலில் இதைப்பார்த்த ரெயில்வே ஊழியர்கள் அந்த நபர் டவரில் வேலை செய்கிறார் என்று நினைத்து கொண்டனர். ஆனால் நேரம் செல்ல செல்ல அந்த வாலிபர் 80 அடி உயரத்திற்கு மேலே உட்கார்ந்து இருப்பது தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ரெயில்வே அதிகாரிகள் இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார், ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், சூரம்பட்டி போலீசார் மற்றும் ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்கு போலீசார் வரைந்து வந்தனர். அவர்கள் அந்த வாலிபர் இடம் பேச்சுவார்த்தை கொடுத்தனர்.

    அப்போது அந்த வாலிபர் ஹிந்தியில் பேசியதால் ஹிந்தி பேசத் தெரிந்த மற்றொரு வாலிபரை அழைத்து வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அந்த வாலிபர் தனக்கு பல பிரச்சினைகள் இருப்பதாகவும், கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள போகிறேன் எனவும் மிரட்டல் விடுத்தார். சர்ச் பாதிரியாரை வரச்சொல்லுங்கள் அப்போதுதான் கீழே இறங்குவேன் என்றும் கூறினார்.

    பின்னர் அந்த வாலிபர் மேலே ஏறுவதும் பாதி தூரம் வரை கீழே வந்து திருப்பி மீண்டும் மேலே ஏறுவதும் என போக்கு காட்டி வந்தார். ஒரு கட்டத்தில் செல்போன் கேட்கவே போலீசார் ஒரு செல்போனை டவர் தகட்டில் வைத்தனர். அதை எடுக்க இறங்கியபோது போலீசார் பிடிக்க முயன்றதால் போனை எடுக்காமல் மீண்டும் டவர் மீது ஏறிக்கொண்டார். பின்னர் போலீசார் ஒருவர் பாதிரியார் போன்று வேஷம் போட்டு மேலே செல்ல முயன்றார். ஆனால் அவர் உண்மையான பாதிரியார் இல்லை என தெரிந்து கொண்ட அந்த வாலிபர் மீண்டும் மேலே ஏறி சென்று விட்டார்.

    இந்நிலையில் மாலை 4.30 மணியளவில் கனமழை பெய்ய தொடங்கியது. அப்போது அந்த வாலிபர் இறங்கி விடுவார் என்று எதிர்பார்த்த போலீசாருக்கு ஏமாற்றம் மிஞ்சியது. அந்த நபர் மழையில் நடந்தபடி மேலே டவரில் தொடர்ந்து அமர்ந்து இருந்தார். இரவு வரை தொடர்ந்த அந்த வாலிபர் டவரில் அமர்ந்து இருந்தார். பின்னர் இரவு 12 மணி ஆனது. ஆனாலும் அந்த வாலிபர் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து கொண்டிருந்தார்.

    பின்னர் போலீசார் அங்கிருந்து கிளம்பி செல்வது போன்று அங்கிருந்து சிறிது தூரம் கிளம்பி சென்றனர். பின்னர் நள்ளிரவு 2.45 மணியளவில் அந்த வாலிபர் நன்றாக தூங்கி கொண்டிருந்தார். அப்போது டவரில் நன்கு ஏறும் வாலிபர் ஒருவரை போலீசார் அழைத்து வந்து அந்த 80 அடி மின் டவரில் ஏற செய்தனர். வாலிபர் நன்றாக தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் டக்கென்று இந்த வாலிபர் மேலே இருந்த வாலிபரை பிடித்துக் கொண்டார்.

    உடனடியாக தீயணைப்பு துறையினர் வேகமாக சென்று அந்த வாலிபரை மீட்டனர். பின்னர் அந்த நபர் ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் மத்திய பிரதேசம் மாநிலம் மண்டேல் மாவட்டத்தை சேர்ந்த ராகுல் மார்க்கம் (26) என்பதும், கேரளாவில் அவரது நண்பரை பார்க்க ரெயிலில் ஏறி வந்தவர் வழி தவறி ஈரோட்டில் இறங்கி விட்டதும் தெரிய வந்தது. அவருக்கு தமிழ் புரியாததால் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் சுற்றி வந்துள்ளார்.

    பின்னர் திடீரென 80 அடி மின் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. எதற்காக தற்கொலை மிரட்டல் விடுத்தார் என்று அந்த நபரிடம் கேட்டபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதையடுத்து கேரளாவில் உள்ள அவரது நண்பருக்கு போலீசார் போனில் தொடர்பு கொண்டு ஈரோடுக்கு வருமாறு கூறினர்.

    இதனையேற்று அவரது நண்பர் கேரளாவில் இருந்து வந்து கொண்டிருக்கிறார். அவர் வந்த பிறகு தான் ராகுல் மார்க்கமுக்கு என்ன பிரச்சனை உள்ளது. எதற்காக தற்கொலை மிரட்டல் விடுத்தார் என முழு விவரம் தெரிய வரும். கிட்டத்தட்ட 13 மணி நேரம் போலீசாரை அலறவிட்ட வடமாநில வாலிபர் செயலால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • 2 மாணவிகள் டியூசன் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தனர்.
    • வடமாநில வாலிபர்கள் மாணவிகளை துரத்தி சென்றதாக கூறப்படுகிறது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் ஆசாரி பள்ளம் கீழப் பெருவிளை பகுதியை சேர்ந்த 2 மாணவிகள் டியூசன் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது 2 வடமாநில வாலிபர்கள் அவர்களை பின்தொடர்ந்து சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவிகள் வேகமாக சென்றனர். உடனே வடமாநில வாலிபர்கள் மாணவிகளை துரத்தி சென்றதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து மாணவிகள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள், ஆசாரிப்பள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 வாலிபர்களையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த வாலிபர்கள் அதே பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாகவும் வெளியே சென்று விட்டு வந்து கொண்டிருந்தபோது நாய் தங்களை துரத்தியதால் ஓடியதாகவும் தெரிவித்தனர்.

    இதை தொடர்ந்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகிறார்கள். அவர்கள் மாணவிகளை பின்தொடர்ந்து சென்றார்களா? என்பது குறித்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • குடியாத்தம் அருகே சுற்றித்திரிந்ததால் சந்தேகம்
    • மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது

    வேலூர்:

    குடியாத்தம் டவுன், ரெயில் நிலையம் அருகே உள்ள பரசுராம்பட்டியில் நேற்று மாலை வடமாநில வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றி திரிந்தார்.

    இதனால் வட மாநில வாலிபர் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்க வந்ததாக அப்பகுதி மக்கள் சந்தேகம் அடைந்தனர். பொதுமக்கள் வட மாநில வாலிபரை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்தனர்.

    இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

    விசாரணையில் அந்த வாலிபர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபருக்கு ரெயில் டிக்கெட் எடுத்து ரெயிலில் அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில்:-

    மனநலம் பாதிக்கப்பட்டு ரெயிலில் வரும் வட மாநில வாலிபர்கள் ரெயில் நிலையம் அருகே உள்ள பரசுராம் பட்டியில் சுற்றித் திரிவது வழக்கமாக உள்ளது.

    அதேபோல் தான் இந்த வாலிபரும் வந்து உள்ளார். மனநலம் பாதிக்கப் பட்டவர் என தெரிந்ததால் அவரை ஊருக்கு அனுப்பி வைத்தோம் என்றனர்.

    • ரெயில்வே போலீசாருக்கும் உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.
    • 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அந்த வாலிபரை மீட்டனர்

    நாகர்கோவில் :

    நாங்குநேரி ரெயில் நிலையத்தில் மாடியில் நின்று கொண்டு இன்று காலை வாலிபர் ஒருவர் ரகளை ஈடுபட்டு கொண்டி ருந்தார். இதை பார்த்த ரெயில்வே ஊழியர்கள் அந்த வாலிபரை கீழே இறங்குமாறு தெரிவித்தனர். ஆனால் அந்த வாலிபர் கீழே இறங்கவில்லை. மாடியிலேயே அமர்ந்தருந்தார். பலமுறை அழைத்தும் அந்த வாலிபர் இறங்காததால் நாகர்கோவில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கும், ரெயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.

    ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது வாலிபர் மாடியில் அமர்ந்து கொண்டு ரகளை செய்து கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார் அந்த வாலிபரை கீழே இறங்கி வருமாறு அழைத்தனர்.

    ஆனால் அந்த வாலிபர் வருவதற்கு மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து நாங்குநேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். உடனடியாக மாடியில் அமர்ந்திருந்த வாலிபரை மீட்க முயன்றனர். 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அந்த வாலிபரை மீட்டனர். மீட்கப்பட்ட வாலிபரை மாடியில் இருந்து கீழே இறக்கி கொண்டு வந்தனர். பின்னர் அந்த வாலிபரை தீயணைப்பு துறையினர் ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியபோது அவர் வட மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும் போதையில் அந்த வாலிபர் மாடியில் ஏறி இருந்தது தெரியவந்தது. ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். ரெயில் நிலையத்தில் வாலிபர் போதையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது.

    • கஞ்சா சாக்லெட் விற்கப்படுவதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • 150 கிராம் எடை உள்ள கஞ்சா சாக்லெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    திருப்பூர் :

    திருப்பூர் அடுத்த பொங்குபாளையம் ஊராட்சி, பரமசிவம் பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லெட் விற்கப்படுவதாக, அப்பகுதி பொதுமக்கள் பெருமாநல்லுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் கிடைத்ததும் இன்ஸ்பெக்டர் ஹேமலதா, தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது கஞ்சா சாக்லெட் விற்பனையில் ஈடுபட்ட பீகார் மாநிலத்தை சேர்ந்த இன்டேல் குமார் (வயது 26) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து, 150 கிராம் எடை உள்ள 10 பாக்கெட் கஞ்சா சாக்லெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • அன்கீத்குமாரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
    • கொலை செய்து வேறு இடத்தில் வீசியதை ஒப்புக்கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை கந்தாம்பாளையத்திற்கு அருகே உள்ள தனியார் பள்ளியின் காம்பவுண்ட் அருகே கடந்த பிப்ரவரி மாதம் 13-ந் தேதி நிர்வாண நிலையில் ஒரு பெண் இறந்து கிடப்பதாக பெருந்துறை போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பெண் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இதில் பிணமாக கிடந்தது உத்திரபிரதேச மாநிலம் மெரகாபாத் மாவட்டம் முஜாப்பூர் பகுதியை சேர்ந்த ரேஷ்மா காதூன் (36) என தெரியவந்தது.

    மேலும் ரேஷ்மா காதூனுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளதும், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து பெற்று ரேஷ்மா காதூன் தனியாக வாழ்ந்து வந்ததும் தெரிய வந்தது.

    அப்போது அதே மாவட்டத்தை சேர்ந்த அன்கீத்குமார் (24), ரேஷ்மா காதூனுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.

    இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை கந்தாம்பாளையத்தில் உள்ள நூல் மில்லில் தங்கி பணியாற்றி வந்துள்ளனர்.

    இந்நிலையில் ரேஷ்மா காதூனுக்கும், அன்கீத்குமாருக்கும் இடையே கடந்த பிப்ரவரி மாதம் 8-ந் தேதி ஏற்பட்ட தகராறில் அன்கீத்குமார் ரேஷ்மாகாதூனை தலையணையால் அமுக்கி கொலை செய்துள்ளார்.

    கொலையை மறைக்க ரேஷ்மா காதூனை நிர்வாணமாக்கி உடலை அருகே உள்ள தனியார் பள்ளி காம்பவுண்டிற்குள் வீசி விட்டு தலைமறைவானது தெரியவந்தது.

    இதையடுத்து பெருந்துறை போலீசார் தலைமறைவான அன்கீத்குமாரை தேடி வந்தனர். இந்நிலையில் பெருந்துறை பகுதியில் பதுங்கியிருந்த அன்கீத்குமாரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் ரேஷ்மா காதூனை கொலை செய்து வேறு இடத்தில் வீசியதை ஒப்புக்கொண்டார்.

    இதைத்தொடர்ந்து கொலை செய்தல், கொலையை மறைத்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து அன்கீத்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    தலைமறைவாகி கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு பிறகு கொலையாளி பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வீட்டில் நாகேந்திரகுமார் தூக்குபோட்டு தொங்கிக்கொண்டு இருந்தார்.
    • இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    பீகார் மாநிலம் பாட்னாவை அடுத்துள்ள செளரா பகுதியைச் சேர்ந்த வர் நாகேந்திர குமார்(21). இவரது மனைவி பூஜா. பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டம் புரா கிராமத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் உள்ளார்.

    நாகேந்திர குமார் ஈரோடு மாவட்டம் வில்லரசம்பட்டி நால்ரோடு பகுதியில் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்த ன்று நாகேந்திர குமார் மனைவி பூஜாவிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இருவரும் இடையே போனில் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் நாகேந்திர குமார் உடன் வேலை பார்க்கும் கோவிந்தன் என்பவர் நாகேந்திரகுமார் வீட்டிற்கு சென்று கதவைத் தட்டி உள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் நாகேந்திர குமார் தூக்குபோட்டு தொங்கிக்கொண்டு இருந்தார்.

    உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் நாகேந்திரகுமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரஞ்சன்மாலிக் பனியம்பள்ளியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குபோட்டு தற்ெகாலை செய்து கொண்டார்.
    • இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஒடிசா மாநிலம் பார்டர்க் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சன் மாலிக் (25). இவர் கடந்த சில மாதங்களாக ஈரோடு மாவட்டம் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்நிலையில் சம்பவத் தன்று ரஞ்சன்மாலிக் பனியம்பள்ளியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குபோட்டு தற்ெகாலை செய்து கொண்டார்.

    அவரது நண்பர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ரஞ்சன் மாலிக்கை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் ஏற்கனவே ரஞ்சன் மாலிக் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ரஞ்சன் மாலிக் எதற்காக தற்கொலை செய்து கொ ண்டார் என தெரியவில்லை.

    திருமணம் ஆகாத ஏக்கத்தால் தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது வேறு என்ன காரணம் என்பது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல்லடம் கல்லம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் விசைத்தறி குடோனில் வேலை பார்த்து வருகிறார்.
    • 3 நபர்கள் 2 செல்போன்கள், ரூ.3500, பணம் ஆகியவற்றை வழிப்பறி செய்து விட்டு மின்னலென மறைந்து விட்டனர்.

    பல்லடம் :

    ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜெயதீப் மகன் ராகுல்தீப்(வயது 24). இவர் பல்லடம் கல்லம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் விசைத்தறி குடோனில் வேலை பார்த்து வருகிறார். இவரது உறவினர் சுபாஷ் சந்த்(23). இவர் பல்லடம் அருகே உள்ள சின்னக்கரை, லட்சுமி நகரில் தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை விடப்பட்டதால் சுபாஷ் சந்தை சந்திப்பதற்காக சின்னக்கரை லட்சுமி நகருக்கு ராகுல் தீப் சென்றார். இரவு நேரம் ஆகிவிட்டதால், சுபாஷ் சந்த் தனது மோட்டார் சைக்கிளில் ராகுல் தீப்பை ஏற்றிக்கொண்டு பல்லடம் கல்லம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். கரைப்புதூரை அடுத்துள்ள ஆறுமுத்தாம்பாளையம் தொட்டி அப்புச்சி கோவில் ரோட்டில் செல்லும்போது. இவர்களது மோட்டார் சைக்கிளை வழிமறித்த அடையாளம் தெரியாத 3 நபர்கள் இவர்களை மிரட்டி இவர்கள் வைத்திருந்த 2 செல்போன்கள், ரூ.3500, பணம் ஆகியவற்றை வழிப்பறி செய்து விட்டு மின்னலென மறைந்து விட்டனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து இருவரும் பல்லடம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் வழிப்பறி செய்த நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • செப்டம்பர் 21 ந்தேதி அன்று வழக்கம் போல குடும்பத்தினர் அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டனர்.
    • வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கரைபுதூர் ரேசன் கடை வீதியில் வசித்து வருபவர் ஆறுமுகம் (46) இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த செப்டம்பர் 21 ந்தேதி அன்று வழக்கம் போல குடும்பத்தினர் அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டனர். வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம் குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 1/4 பவுன் தங்க கம்மல் ரூ.30 ஆயிரம் பணம் ஆகியவை திருடப்பட்டிருந்தது. இதையடுத்து திருட்டு சம்பவம் குறித்து பல்லடம் போலீசில் ஆறுமுகம் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஆலாங்கிர் மகன் முகமது (சுபியர்27) என்பவரை ஆறுமுகம் வீட்டில் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜார்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×