திருப்பூரில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த வட மாநில வாலிபர் கைது - 10 பாக்கெட்டுகள் பறிமுதல்

கஞ்சா சாக்லெட் விற்கப்படுவதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.150 கிராம் எடை உள்ள கஞ்சா சாக்லெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

திருப்பூர் அடுத்த பொங்குபாளையம் ஊராட்சி, பரமசிவம் பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லெட் விற்கப்படுவதாக, அப்பகுதி பொதுமக்கள் பெருமாநல்லுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் கிடைத்ததும் இன்ஸ்பெக்டர் ஹேமலதா, தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது கஞ்சா சாக்லெட் விற்பனையில் ஈடுபட்ட பீகார் மாநிலத்தை சேர்ந்த இன்டேல் குமார் (வயது 26) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து, 150 கிராம் எடை உள்ள 10 பாக்கெட் கஞ்சா சாக்லெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com