செய்திகள்
அபராதம்

தர்மபுரி மாவட்டத்தில் விதிமீறலில் ஈடுபட்ட 441 பேருக்கு அபராதம்

Published On 2021-04-21 09:44 GMT   |   Update On 2021-04-21 09:44 GMT
நேற்று நடைபெற்ற சோதனையின்போது முககவசங்கள் அணியாமல் பொது இடங்களில் சென்ற 409 பேர் போலீசாரிடம் சிக்கினர். இவர்களுக்கு ரூ.81 ஆயிரத்து 800 அபராதம் விதிக்கப்பட்டது.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இந்த தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா பரவல் தடுப்பு விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதை சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் போலீசார் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். நேற்று நடைபெற்ற சோதனையின்போது முககவசங்கள் அணியாமல் பொது இடங்களில் சென்ற 409 பேர் போலீசாரிடம் சிக்கினர். இவர்களுக்கு ரூ.81 ஆயிரத்து 800 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் விதி மீறலில் ஈடுபட்ட 32 பேருக்கு ரூ.17 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. நேற்று மாவட்டம் முழுவதும் விதி மீறலில் ஈடுபட்ட 441 பேரிடம் ரூ.98 ஆயிரத்து 800 அபராதம் வசூலிக்கப்பட்டது.
Tags:    

Similar News