செய்திகள்
மதுபானம்

முக கவசம் அணிந்து வந்தால் மட்டும் மது விற்பனை- டாஸ்மாக் நிபந்தனை

Published On 2021-04-20 04:03 GMT   |   Update On 2021-04-20 04:03 GMT
டாஸ்மாக் கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு இடையே குறைந்தபட்சம் 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பன போன்ற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

கொரோனாவின் 2-வது அலையை சமாளிக்க இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. டாஸ்மாக் கடைகள் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

* டாஸ்மாக் கடைகளில் எந்தவொரு கூட்ட நெரிசலும் இருக்கக்கூடாது.

* வாடிக்கையாளர்களுக்கு இடையே குறைந்தபட்சம் 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

*ஒரே நேரத்தில் கடையின் உள்ளே 3 பேருக்கு மேல் இருக்கக்கூடாது.



* கடை ஊழியர்கள் 3 அடுக்கு முக கவசம், முகமூடி, கையுறைகள் மற்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் கிருமிநாசினி திரவத்தை கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.

* கடையை சுற்றிலும் பிளீச்சிங் பவுடரை தூவ வேண்டும்.

* 2 ஊழியர்கள் கடையின் வெளிப்புறம் நின்று மதுப்பிரியர்களை சமூக இடைவெளியை பின்பற்றி வர செய்வதும், முக கவசம் அணிந்து வர செய்வதும் மற்றும் விற்பனை பணியை மேற்கொள்ள வேண்டும்.

* மதுப்பிரியர்களை கடையின் அருகில் மது அருந்த அனுமதிக்கக்கூடாது. கடையில் அதிக கூட்டம் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* முக கவசம் அணிந்து வரும் மதுப்பிரியர்களுக்கு மட்டும் மது விற்பனை செய்ய வேண்டும்.

* எக்காரணம் கொண்டும் மதுபானங்களை மொத்தமாக விற்பனை செய்யக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News