செய்திகள்
கொரோனா வைரஸ்

பரமக்குடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படுமா?

Published On 2021-04-09 10:45 GMT   |   Update On 2021-04-09 10:45 GMT
கொரோனா குறித்த கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரமக்குடி:

தமிழகத்தில் கொரனோ 2-வது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது.நாளுக்குநாள் கொரோனா அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சம் அடைந்து வருகின்றனர். ஆனால் மக்களிடையே கொரோனா குறித்த விழிப்புணர்வு பயம் இல்லை என்பதே வேதனைக்குரியதாகும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் அறிவித்திருந்தார். ஆனால் அதை பொதுமக்கள் யாரும் பின்பற்றாமல் எந்தவித அச்சமுமின்றி அணியாமல் உள்ளனர். குறிப்பாக மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பஸ் நிலையம், ரெயில் நிலையம், பேக்கரிகள், ஓட்டல்கள் ஆகியவற்றில் கூட முககவசம், கையுறை, சானிடைசர் ஆகியவை பயன்படுத்தப்படாத நிலை உள்ளது.

சிறு குழந்தைகளோடு வரும்போதும் இதே நிலைதான் உள்ளது. சுகாதாரத் துறையினரும் நகராட்சி நிர்வாகமும் இதற்கு தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு கொரோனா குறித்த கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும், பின்பற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News