செய்திகள்
கோப்புபடம்

தேர்தல் அதிகாரிகள் சோதனையில் குமரியில் இதுவரை ரூ.4 கோடி பறிமுதல்

Published On 2021-04-02 11:37 GMT   |   Update On 2021-04-02 11:37 GMT
தேர்தல் அதிகாரிகள் நடத்திய சோதனையில் குமரியில் இதுவரை ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:

தமிழகத்தில் பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதனை தொடர்ந்து வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வினியோகிப்பதை தடுக்க பறக்கும் படையினர் மற்றும் தேர்தல் நிலையான கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் குமரி மாவட்டம் குளச்சல் தொகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி மரிய ஸ்டெல்லா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்தாஸ் மற்றும் போலீசார் நேற்று மண்டைக்காடு செல்லும் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில், உரிய ஆவணங்கள் இன்றி ரூ.65 ஆயிரத்து 460 இருந்தது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து கல்குளம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இதன் மூலம் குமரி மாவட்டத்தில் பறக்கும் படை மற்றும் தேர்தல் நிலையாக கண்காணிப்பு குழுக்கள் நடத்திய தீவிர வாகன சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி நேற்று வரை ரூ.3 கோடியே 90 லட்சத்து 75 ஆயிரத்து 919 பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதாவது, கன்னியாகுமரி தொகுதி ரூ.24 லட்சத்து 90 ஆயிரம் 045, நாகர்கோவில் தொகுதி- ரூ.1 கோடி 73 லட்சத்து 61 ஆயிரத்து 968, குளச்சல் தொகுதி- ரூ.67 லட்சத்து 20 ஆயிரத்து 445, பத்மநாபபுரம் தொகுதியில்- ரூ.33 லட்சத்து 94 ஆயிரத்து 255, விளவங்கோடு தொகுதி- ரூ.45 லட்சத்து 73 ஆயிரத்து 314 மற்றும் கிள்ளியூர்- 45 லட்சத்து 35 ஆயிரத்து 892 ஆகும்.

அதிகபட்சமாக நாகர்கோவில் தொகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி பணம் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News