செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி.

ஜோலார்பேட்டை அருகே சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையத்தில் 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Published On 2021-03-04 15:27 GMT   |   Update On 2021-03-04 15:27 GMT
சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலைய நடைமேடை ஓரம் பதுக்கி வைத்திருந்த 70 மூட்டை ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அருகே சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையத்தில் இருந்து கர்நாடகத்துக்கு நேற்று அதிகாலை 4 மணியளவில் ரெயிலில் ரேஷன் அரிசி கடத்தப்பட இருப்பதாக நாட்டறம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் வட்ட வழங்கல் அலுவலர் நடராஜன் தலைமையில் வருவாய்த்துறை அலுவலர்கள் 2 மோட்டார் சைக்கிள்களில் அங்கு சென்றனர். அப்போது ரெயில் நிலைய நடைமேடை ஓரம் பதுக்கி வைத்திருந்த 3 டன் எடையிலான 70 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, ஒரு மினிவேனில் ஏற்றி நாட்டறம்பள்ளி தாசில்தார் அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனர்.

அதிகாரிகளை பார்த்ததும் கடத்தல்காரர்கள் அங்கிருந்து வெளியேறி ரெயில் நிலையம் அருகில் வெளியே நிறுத்தப்பட்டு இருந்த அதிகாரிகள் வந்த ஒரு மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றனர். அதிகாரிகள் திரும்பி வந்து பார்த்தபோது, மோட்டார்சைக்கிள் சேதப்படுத்தப்பட்டு இருந்ததை மீட்டு பழுதுப்பார்க்க கொண்டு சென்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News