செய்திகள்
கொரோனா தடுப்பூசி

மதுரையில் ஒரே நாளில் 1,077 பேருக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-02-15 03:46 GMT   |   Update On 2021-02-15 03:46 GMT
மதுரையில் ஒரே நாளில் 1,077 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
மதுரை:

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 16-ந்தேதி மதுரையில் தொடங்கி வைத்தார். அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் தடுப்பூசி போடுவதற்காக, தனித்தனி கொரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்ட மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தை பொறுத்தவரையில் அரசு ராஜாஜி மருத்துவமனை, திருமங்கலம், மேலூர், கள்ளந்திரி, சமயநல்லூர், அலங்காநல்லூர், கச்சக்கட்டி, செக்கானூரணி, டி.கல்லுப்பட்டி, கள்ளிக்குடி, செல்லம்பட்டி, எழுமலை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அந்த மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, மதுரையில் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 1077 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

மதுரையில் இதுவரை தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கையும் 11 ஆயிரத்து 663 ஆக உயர்ந்துள்ளது. இதில் 10 ஆயிரத்து 379 பேர் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள். இதுபோல் ஆயிரத்து 119 பேர் போலீஸ் துறையை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News