செய்திகள்
மழையினால் சேதமடைந்த நெற்பயிர்களை கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு

மழையால் நெற்பயிர்-நிலக்கடலை பாதிப்பு: கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு

Published On 2021-01-25 03:59 GMT   |   Update On 2021-01-25 03:59 GMT
தஞ்சை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர், நிலக்கடலைகளை கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. நிலக்கடலை, உளுந்து, மக்காச்சோளம், எள் உள்ளிட்ட பயிர்களும் பாதிக்கப்பட்டிருந்தன. பயிர்கள் பாதிப்பு குறித்து வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை அலுவலர்கள் கொண்ட குழுவினர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் தஞ்சையை அடுத்த வல்லம்புதூர் பகுதிகளில் பாதிக்கப்பட்டிருந்த நெற்பயிர்களை கலெக்டர் கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அந்த பகுதியில் வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் கணக்கெடுப்பு பணி மேற்கொண்டு வருவதையும், பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட விவரங்கள் குறித்த பதிவேடுகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் பாதிக்கப்பட்ட நிலக்கடலை பயிர்களை பார்வையிட்ட அவர், நிலக்கடலை சாகுபடி செய்து எவ்வளவு நாட்கள் ஆகிறது என்பது குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ஜஸ்டின், உதவி இயக்குனர் அய்யம்பெருமாள், தாசில்தார் வெங்கடேஸ்வரன் மற்றும் வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள், விவசாயிகள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News