செய்திகள்
மாணவிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல்வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் 326 பள்ளிகள் திறக்கப்பட்டன

Published On 2021-01-20 04:50 GMT   |   Update On 2021-01-20 04:50 GMT
நாமக்கல் மாவட்டத்தில் 326 பள்ளிகள் திறக்கப்பட்டன. 10-ம் வகுப்பு மாணவர்கள் 14,239 பேரும், 12-ம் வகுப்பு மாணவர்கள் 13,700 பேரும் பள்ளிக்கு வந்திருந்தனர்.
நாமக்கல்:

கொரோனா தொற்றின் எதிரொலியாக தமிழகத்தில் கடந்த 9 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. இதனிடையே 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால், அந்த மாணவர்களுக்காக மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் உள்ள 346 பள்ளிகளில் 20 பள்ளிகள் திறக்கப்படவில்லை. நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி உள்பட நாமக்கல் மாவட்டத்தில் 326 பள்ளிகள் திறக்கப்பட்டன. 10-ம் வகுப்பு மாணவர்கள் 14,239 பேரும், 12-ம் மாணவர்கள் 13,700 பேரும் பள்ளிக்கு வந்திருந்தனர்.

தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பிறகே, மாணவர்கள் பள்ளிகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அவர்களின் பயன்பாட்டிற்காக சோப்பு மற்றும் சானிடைசர் ஆகியவை பள்ளிகளில் வைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து வகுப்பறைக்கு சென்ற மாணவ மாணவிகள், ஒரு பெஞ்சிற்கு 2 பேர் வீதம் சமூக இடைவெளிவிட்டு அமர வைக்கப்பட்டனர். இதையொட்டி முன்னதாக நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News