செய்திகள்
டாஸ்மாக் கடை ஷட்டரில் மர்மநபர்கள் வெல்டிங் மெஷின் மூலம் துளை போட்டுள்ளதை படத்தில் காணலாம்.

ஏரல் அருகே டாஸ்மாக் கடை கதவை உடைத்து கொள்ளை முயற்சி

Published On 2021-01-17 12:18 GMT   |   Update On 2021-01-17 12:18 GMT
ஏரல் அருகே டாஸ்மாக் கடை கதவை உடைத்து மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால் லாக்கரை உடைக்க முடியாததால் பல லட்சம் ரூபாய் தப்பியது.
ஏரல்:

ஏரல் அருகே கொற்கை விலக்கு நாலுமுக்கு சாலையில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்தக் கடையில் முக்காணி வடக்கு யாதவர் தெருவை சேர்ந்த மாரியப்பன் (வயது 51) என்பவர் சூப்பிரவைசராக உள்ளார். கடையில் சுப்பிரமணி, சங்கர் ஆகியோர் கடையில் விற்பனையாளர்களாக உள்ளனர்.

இவர்கள் 3 பேரும் பொங்கலன்று இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளனர். நேற்று முன்தினம் காலை கடை விடுமுறை என்பதால் திறக்கவில்லை.

பின்னர் நேற்று காலையில் மாரியப்பன் உள்ளிட்ட 3 பேரும் கடையை திறக்க வந்தனர். அப்போது கடையின் கதவு ஷட்டரில் வெல்டிங் மெஷின் வைத்து துளை போட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உள்ளே சென்று பார்த்தபோது பணம் இருக்கும் லாக்கரில் இருந்து பணத்தை எடுக்க முயற்சி செய்துள்ளனர். லாக்கரை உடைக்க முடியாததால் மர்ம நபர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். இதனால் லாக்கரில் இருந்த பல லட்சம் ரூபாய் தப்பியது.

இதுகுறித்த புகாரின்பேரில் ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் முருகப்பெருமாள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

இதுதொடர்பாக மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News