செய்திகள்
கோப்புப்படம்

தமிழகத்தில் 160 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் மையங்கள்

Published On 2021-01-14 18:46 GMT   |   Update On 2021-01-14 18:46 GMT
தமிழகத்தில் 160 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் மையங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை:

கொரோனா தடுப்பூசி போடும் இயக்கத்தைப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமையன்று தொடங்கி வைக்கிறார். நாடு முழுவதும் மூவாயிரம் மையங்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் 160 இடங்களில் கொரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

சென்னையில் 12 மையங்கள், சேலத்தில் 7 மையங்கள், மதுரை, திருச்சியில் தலா 5 மையங்கள், கோவையில் 4 மையங்கள் அமைக்கப்பட உள்ளன. சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனை கொரோனா தடுப்பூசி மையத்தைப் பிரதமர் நரேந்திர மோடி காணொலியில் தொடங்கி வைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசுடன் ஆலோசித்து பொதுமக்களுக்கு எப்போது தடுப்பூசி போடப்படும் என்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும் மாஸ்க்,  மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றால் அது தவறு என கூறியுள்ளார்.
Tags:    

Similar News