செய்திகள்
மாநகர பஸ்

பொங்கலுக்கு வெளியூர் செல்ல வசதியாக சென்னையில் 310 மாநகர பஸ்கள்

Published On 2021-01-12 01:46 GMT   |   Update On 2021-01-12 01:46 GMT
பொங்கலுக்கு வெளியூர் செல்ல வசதியாக சென்னையில் மேலும் 310 மாநகர பஸ்களை 24 மணி நேரமும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:

பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னையில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக நேற்று தொடங்கி நாளை (புதன்கிழமை) வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதில் நேற்று மட்டும் 2 ஆயிரத்து 226 பஸ்கள் புறப்பட்டு சென்றன. இன்று (செவ்வாய்க்கிழமை) 4 ஆயிரம் பஸ்களும், நாளை (புதன்கிழமை) 4 ஆயிரத்து 2 பஸ்களும் என மொத்தம் 10 ஆயிரத்து 228 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர பல்வேறு மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரத்து 993 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்த சிறப்பு பஸ்கள் கோயம்பேடு, மாதவரம், தாம்பரம், பூந்தமல்லி, கே.கே.நகர் பஸ் நிலையங்களில் இருந்து இயக்கப்படுகின்றன.

இந்த பஸ் நிலையங்களுக்கு பொதுமக்கள் செல்வதற்காக வசதியாக நாளை வரை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மேலும் 310 இணைப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதில் கோயம்பேட்டுக்கு 116 பஸ்களும், தாம்பரத்திற்கு 114 பஸ்களும், பூந்தமல்லிக்கு 57 பஸ்களும், மாதவரத்துக்கு 16 பஸ்களும், கே.கே.நகருக்கு 7 பஸ்களும் இயக்கப்படுகின்றன.

மேற்கண்ட தகவலை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News