செய்திகள்
கமல்ஹாசன்

தமிழகத்தில் தொட்டில் முதல் சுடுகாடு வரை லஞ்சம் பெறுவது தொடர்கிறது- கமல்ஹாசன்

Published On 2020-12-28 05:41 GMT   |   Update On 2020-12-28 05:41 GMT
அரசு மருத்துவமனைகளில் பெண் குழந்தை பிறந்தால் ரூ. 300, ஆண் குழந்தை பிறந்தால் ரூ. 500 லஞ்சம் பெறுகின்றனர் என்று கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை:

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எந்தெந்த வேலைகளுக்கு எவ்வளவு லஞ்சம் பெறப்படுகிறது என்ற பட்டியலை இன்று வெளியிட்டார். அதில், அரசு மருத்துவமனைகளில் பெண் குழந்தை பிறந்தால் ரூ. 300, ஆண் குழந்தை பிறந்தால் ரூ. 500 லஞ்சம் பெறுகின்றனர். தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் லஞ்சம் வாங்குவது அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

கட்சி தொடங்குவதில் நாடகமாடுகிறாரா ரஜினிகாந்த் என்ற கேள்விக்கு உடல்நலம் தான் முக்கியம் என பதில் அளித்தார். ரஜினிகாந்தின் உடல்நலத்தின் அடிப்படையில் யூகமான தகவல்களை வெளியிடக்கூடாது. 

ரஜினிகாந்த் உடல்நலம் சரியான பின் (கட்சி தொடர்பான) பணிகளை தொடங்குவார் என நம்புகிறேன். கூட்டணி குறித்து ஜனவரியில் முடிவெடுக்கப்படும்என்று கூறினார்.
Tags:    

Similar News