செய்திகள்
டிடிவி தினகரன்

நல்லக்கண்ணு பிறந்தநாள்: டிடிவி தினகரன் வாழ்த்து

Published On 2020-12-26 08:34 GMT   |   Update On 2020-12-26 08:34 GMT
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு டி.டி.வி.தினகரன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை:

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

இந்திய விடுதலைக்காக போராடிய தியாகியும், தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவரும் முதுபெரும் இடதுசாரி சிந்தனையாளருமான அன்புக்குரிய பெரியவர் ஆர்.நல்லக்கண்ணுவுக்கு மனப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

‘எளிமையே வலிமை’ என்பதை நிரூபிக்கும் பொது வாழ்வுக்குச் சொந்தக் காரரான அவர், நல்ல உடல் நலத்துடனும், மகிழ்ச்சியுடனும் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்திட எல்லாம் வல்ல இறையருள் துணை நிற்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News