செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு

Published On 2020-12-15 07:48 GMT   |   Update On 2020-12-15 07:48 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ஒரு சவரன் ரூ.37,032-க்கு விற்பனையாகிறது.

சென்னை:

தங்கம் விலையில் சில நாட்களாக ஏற்றத்தாழ்வு காணப்படுகிறது. நேற்று பவுன் ரூ.36 ஆயிரத்து 888 விற்றது. இந்த நிலையில் இன்று தங்கம் பவுன் மீண்டும் ரூ.37 ஆயிரத்தை தாண்டியது.

சென்னையில் இன்று காலை தங்கம் விலையில் பவுனுக்கு ரூ.144 அதிகரித்து ரூ.37 ஆயிரத்து 32-க்கு விற்கிறது. கிராமுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.4,629 ஆக உள்ளது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.67 ஆயிரத்து 300 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.30-க்கு விற்கிறது.

Tags:    

Similar News