செய்திகள்
அர்ஜூன மூர்த்தி - தமிழருவி மணியன்

ஆன்மீக அரசியல் வேறு, மத அரசியல் வேறு- தமிழருவி மணியன்

Published On 2020-12-05 08:56 GMT   |   Update On 2020-12-05 17:49 GMT
ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கும், மத அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ரஜினி மக்கள் மன்ற மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் கூறினார்.
சென்னை:

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினி மக்கள் மன்ற மேற்பார்வையாளர் தமிழருவி மணியனுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* முதல்வர் வேட்பாளர் பற்றி ரஜினியோ, நாங்களோ தற்போது பேசவில்லை. முதல்வர் வேட்பாளர் பற்றி ரஜினி ஏற்கனவே பேசியது அப்படியே நிற்கிறது.

* கட்சிக்கு தேவையான அனைத்து அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம். அடிப்படை கட்டமைப்பு குறித்து ஆழமாகவும், விரிவாகவும் ஆலோசித்து வருகிறோம்.

* கட்சி தொடர்பான அனைத்து செய்திகளையும் ரஜினிகாந்த் அறிவிப்பார். கட்சியின் பெயர், சின்னம் உள்பட அனைத்தையும் ரஜினிகாந்த் தான் சொல்வார்.

* மற்றவர்களை விமர்சித்து தனது கட்சியை வளர்க்காமல் ஆன்மீக அரசியலை முன்னெடுப்பார்.

* ரஜினி கட்சியை தொடங்கியவுடன் பெரும்பாலான வாக்காளர்கள் ஆதரவு அளிப்பார்கள்.

* திமுக, அதிமுகவின் தவறுகளை பேசி மக்களிடம் சென்று சேர வேண்டும் என நாங்கள் விரும்பவில்லை.

* பாதிப்பில்லை என அரசியல் கட்சிகள் கூறுவதே அவர்களுக்கு பாதிப்பு இருப்பதை காட்டுகிறது.

* ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கும், மத அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

* ரஜினியின் அரசியல் அன்புசார்ந்த ஆன்மீக அரசியல், மற்றவர்களை விமர்சிக்கும் அரசியல் அல்ல.
 
* ஆன்மீக அரசியல் என்பதை முதலில் சொன்னவர் மகாத்மா காந்தி.

* ரஜினி வந்ததும் வாக்காளர்கள் அவரை ஆட்சியில் அமர்த்துவதுதான் அதிசயம், அற்புதம். தமிழகத்தில் ஒரு பேரெழுச்சி ஏற்படும்.

* ரஜினி கட்சி தொடங்கியவுடன் அதனுடன் காந்திய மக்கள் இயக்கம் இணைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.



Tags:    

Similar News