செய்திகள்
காய்ச்சிய குடிநீர்

பொதுமக்கள் காய்ச்சிய குடிநீரை பருக வேண்டும்- சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

Published On 2020-12-02 09:33 GMT   |   Update On 2020-12-02 09:33 GMT
பொதுமக்கள் நோய் தாக்குதலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள காய்ச்சிய குடிநீரை பருக வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் வெயிலின் பாதிப்பு அதிகமாக இருந்து வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதற்கிடையே காலை மற்றும் இரவு நேரங்களில் பனிப்பொழிவும் அதிகமாக உள்ளது. இவ்வாறு பருவகாலம் மாறி உள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள் நோய் தாக்குதலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில், காய்ச்சிய குடிநீரை பருக வேண்டும். இதுபோல் மழைநீர் வீடுகளில் பிளாஸ்டிக், உடைந்த பொருட்கள் மற்றும் டயர்களில் தேங்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். இதுபோல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகளை உண்ண வேண்டும். கொரோனா பாதிப்பும் இருந்து வருவதால், கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Tags:    

Similar News