செய்திகள்
நிவர் புயலில் சேதமான மரம்.

நிவர் புயல் சேதங்களை கணக்கிட திங்கள்கிழமை தமிழகம் வருகிறது மத்திய குழு

Published On 2020-11-28 10:02 GMT   |   Update On 2020-11-28 10:02 GMT
நிவர் புயல் சேதங்களை கணக்கிட திங்கள்கிழமை மத்திய குழு தமிழகம் வருகிறது. அவர்கள் நேரடியாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உள்ளனர்.
சென்னை:

வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது, புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இதன் விளைவாக  சென்னை,கடலூர் ,செங்கல்பட்டு என வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்த நிலையில், சாலைகள் எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.மேலும் பல்வேறு இடங்களில் மரங்கள் சரிந்து கிடக்கின்றது. இதனை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.

ஆகவே தமிழகத்தில் சேதமானவை விவரங்களை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டது. அதன்படி, நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 3 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைக்கப்பட்ட 3,085 முகாம்களில் 2,27,317 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் முழுமையாக கணக்கெடுக்கும் பணி தொடர்கிறது என்று தமிழக அரசு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நிவர் புயல் சேதங்களை கணக்கிட திங்கள்கிழமை தமிழகம் வருகிறது மத்திய குழு. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புயல் பாதித்த பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உள்ளனர்.
Tags:    

Similar News