செய்திகள்
பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து கடல்போல் காட்சியளிப்பதை காணலாம்

கடல்போல் காட்சி அளிக்கும் பிளவக்கல் பெரியாறு அணை

Published On 2020-11-10 09:21 GMT   |   Update On 2020-11-10 09:21 GMT
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பிளவக்கல் பெரியாறு அணை கடல் போல் காட்சி அளிக்கிறது.
வத்திராயிருப்பு:

வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பிளவக்கல் பெரியாறு அணை, கோவிலாறு அணை அமைந்துள்ளது. இந்த பிளவக்கல் பெரியாறு அணை 47 அடி கொள்ளளவு கொண்டது.

கோவிலாறு அணை 42 அடி கொள்ளளவு கொண்டது. தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து முதல் போக விவசாய பணிகளுக்காக பிளவக்கல் மற்றும் கோவிலாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர்.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தண்ணீர் தடையில்லாமல் விவசாயம் செய்ய முடியும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர்.

தற்போது பிளவக்கல் பெரியாறு அணையில் 34 அடி தண்ணீரும், கோவிலாறு அணையில் 16 அடி தண்ணீரும் இருப்பும் உள்ளது. ஆதலால் பிளவக்கல் பெரியாறு அணை தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.
Tags:    

Similar News