செய்திகள்
தமிழக அரசு

புதுவைக்கு பேருந்துகள் இயக்கம்- தமிழக அரசு அறிவிப்பு

Published On 2020-10-31 09:28 GMT   |   Update On 2020-10-31 09:28 GMT
புதுச்சேரிக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்கலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை:

தமிழக பகுதிகளில் பஸ்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதி இருந்தார்.

இந்நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசாணை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

* தமிழகம் - புதுச்சேரி இடையே பேருந்துகளை இயக்க அரசு அனுமதி அளித்ததையடுத்து தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்து சேவை தொடங்குகிறது.

* தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு மட்டுமே பேருந்து சேவை தொடங்கும்.

* பிற மாநிலங்களுக்கு பேருந்து சேவையை தொடங்கும் திட்டம் இல்லை.

* புதுச்சேரிக்கு அரசு மற்றும் தனியார் பேருந்து சேவை மீண்டும் தொடங்க நடவடிக்கை

* இ-பாஸ் இல்லாமல் தமிழகம் - புதுச்சேரி இடையே பேருந்துகளில் பயணிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News