செய்திகள்
பிரதமர் மோடி

மன் கி பாத்: முடிதிருத்தும் நிலையம் நடத்தும் தூத்துக்குடி தமிழரிடம் தமிழில் பேசிய மோடி

Published On 2020-10-25 06:34 GMT   |   Update On 2020-10-25 06:34 GMT
தூத்துக்குடியில் முடித்திருத்தும் நிலையம் நடத்தி வரும் பொன் மாரியப்பன் அங்கே ஒரு நூலகம் அமைத்திருப்பதாக பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் தெரிவித்து பாராட்டினார்.
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன், மக்களுடன் கலந்துரையாடுகிறார். அவ்வகையில் இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில் பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தின் தூத்துக்குடியில் வசித்து வரும் பொன் மாரியப்பன் என்பவரைப் பற்றி பேசினார். தூத்துக்குடியில் முடித்திருத்தும் நிலையம் வரும் பொன் மாரியப்பன் அங்கே ஒரு நூலகம் அமைத்திருப்பதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, பொன் மாரியப்பனிடம் பேசினார். அவரிடம் பேசும்போது ஒருசில வார்த்தைகளை தமிழில் பேசி ஆச்சர்யப்பட வைத்தார்.

வணக்கம் நல்லா இருக்கிறீங்களா? என பொன் மாரியப்பனிடம் பிரதமர் மோடி தமிழில் கேட்டார். 

நூலகம் நடத்தும் யோசனை உங்களுக்கு எப்படி தோன்றியது? உங்களுக்கு என்ன புத்தகம் பிடிக்கும்? என்றும் அவர் கேட்டார். இதற்கு பொன் மாரியப்பன் பதில் அளித்தார்.
Tags:    

Similar News