செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சரின் சுற்றுப்பயணங்கள் ரத்து

Published On 2020-10-13 02:53 GMT   |   Update On 2020-10-13 02:53 GMT
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் காலமானதையடுத்து அவரது சுற்றுப்பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை:

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (93) உடல்நலக்குறைவால் காலமானார்.

சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதுகு வலிக்காக சிகிச்சை பெற்று வந்த அவர், மாரடைப்பு காரணமாக அதிகாலை 1 மணியளவில் காலமானார்.
 
தகவல் அறிந்ததும் சாலை மார்க்கமாக காரில் சேலம் புறப்பட்டுச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாயாரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

தவுசாயம்மாளுக்கு பழனிசாமியுடன் கோவிந்தராஜ் என்ற மகனும் விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

முதலமைச்சரின் தாயார் உடலுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள், உறவினர்களும் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து முதலமைச்சரின் சுற்றுப்பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று தூத்துக்குடி, நாளை கன்னியாகுமரி, விருதுநகரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளவிருந்த ஆய்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.


Tags:    

Similar News