செய்திகள்
பணம் திருட்டு

ஸ்ரீவைகுண்டம் கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியலை உடைத்து கொள்ளை

Published On 2020-09-26 04:01 GMT   |   Update On 2020-09-26 04:01 GMT
ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியை உடைத்து பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம்:

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் சுமார் 101 ஆண்டுகள் பழமை வாய்ந்த தூய இம்மானுவேல் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் அசன பண்டிகை நடைபெறுவது வழக்கம். இந்த பண்டிகை முடிவடைந்த பின்னர் ஆலய உண்டியலில் சேர்ந்துள்ள பணத்தை திறந்து என்னும் பணி நடக்கும்.

ஆண்டுக்கு இருமுறை உண்டியலை உள்ள பணத்தை என்னும் பணி நடந்தாலும், நடப்பு ஆண்டில் கொரோனா காரணமாக கடந்த ஆறு மாதங்களாக ஆலயம் திறக்கப்படாமல் உள்ளது.

இந்த நிலையில் நேற்று காலையில் ஆலய பணியாளர் ஆலயத்தை சுத்தம் படுத்தும் பணிக்காக வந்தார். அப்போது, வாசலில் உள்ள பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஆலய குருவானவர் வேதமாணிக்கத்திற்கு தகவல் தெரிவித்தார். அவர் உள்ளே வந்து பார்த்தபோது வாசலில் உள்ள பூட்டும் வாசலில் பொருத்தப்பட்டுள்ள ஒரு உண்டியல் மற்றும் ஆலயத்தின் உள்ளே வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. யாரோ மர்ம நபர்கள் ஆலயத்தில் புகுந்து உண்டியல் பணத்தை கொள்ளை அடித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News