செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

சென்னையில் 987 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்

Published On 2020-09-19 16:50 GMT   |   Update On 2020-09-19 16:59 GMT
தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 556 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரத்தை காண்போம்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

அதன்படி, தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 569  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 36 ஆயிரத்து 477 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 556 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.  இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 81 ஆயிரத்து 273 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 66 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 781 ஆக அதிகரித்துள்ளது. 30 பேர் தனியார் மருத்துவமனையிலும், 36 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் 987 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,54,624 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை தொற்று உறுதியான 5,36,477  பேரில், 3,23,290 பேர் ஆண்கள், 2,13,157 பேர் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 30 பேர் ஆகும். தமிழகம் முழுவதும் இதுவரை 63,88,583 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று மட்டும் 85,117 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-


அரியலூர் - 38
செங்கல்பட்டு - 293
சென்னை - 987
கோவை - 5565
கடலூர் - 289
தர்மபுரி - 112
திண்டுக்கல் - 73
ஈரோடு - 166
கள்ளக்குறிச்சி - 91
காஞ்சிபுரம் - 175
கன்னியாகுமரி - 105
கரூர் - 68
கிருஷ்ணகிரி - 74
மதுரை - 68
நாகை - 54
நாமக்கல் - 98
நீலகிரி - 87
பெரம்பலூர் -26
புதுக்கோட்டை - 90
ராமநாதபுரம் - 31
ராணிப்பேட்டை - 60
சேலம் - 286
சிவகங்கை - 37
தென்காசி - 65
தஞ்சை - 151
தேனி - 55
திருப்பத்தூர் - 86
திருவள்ளூர் - 282
திருவண்ணாமலை - 160
திருவாரூர் - 100
தூத்துக்குடி - 65
திருநெல்வேலி - 108
திருப்பூர் - 163
திருச்சி - 103
வேலூர் - 146
விழுப்புரம் - 144
விருதுநகர் - 144
விமான நிலையம் (உள்நாடு) - 00
விமான நிலையம் (வெளிநாடு) - 13
இரயில்வே - 00
Tags:    

Similar News