செய்திகள்
குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே

முக கவசம் அணியாத 85 பேருக்கு அபராதம்- கலெக்டர் தகவல்

Published On 2020-09-15 09:59 GMT   |   Update On 2020-09-15 09:59 GMT
குமரி மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் வெளியே சுற்றித்திரிந்த 85 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் நேற்று முக கவசம் அணியாமல் வெளியே சுற்றித்திரிந்த 85 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.8 ஆயிரத்து 500 வசூலானது. குமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும், களப்பணியாளர்கள் மூலமாகவும், சோதனை சாவடிகள் மூலமாகவும் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 523 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. தற்போது ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, கோவிட் கவனிப்பு மையங்கள், தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டுத்தனிமையில் 786 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரத்து 180 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்த தகவல் குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News