செய்திகள்
நீட் தேர்வு

நீட் தேர்வு- மாணவர்களை விட அதிக பதற்றத்தில் இருந்த பெற்றோர்

Published On 2020-09-14 01:54 GMT   |   Update On 2020-09-14 01:54 GMT
‘நீட்’ தேர்வு எழுத வந்திருந்த மாணவ-மாணவிகளை விட அவர்களது பெற்றோர் அதிக பதற்றத்துடனேயே இருந்தனர்.
சென்னை:

‘நீட்’ தேர்வு எழுத வந்திருந்த மாணவ-மாணவிகள் சாதாரணமாக பொதுத்தேர்வுக்கு எப்படி தயாராகி செல்வார்களோ அதேபோல் தங்களை தயார்படுத்திக்கொண்டு வந்திருந்தனர். ஆனால் சில பிள்ளைகளின் பெற்றோர், “ஆவணங்களை சரியாக எடுத்துக்கொண்டாயா? கையில் எடுத்து பத்திரமாக வைத்துக்கொள்” என கூறியபடி அதிக பதற்றத்துடனேயே இருந்தனர்.

இதில் ஒரு மாணவரின் தந்தை, சென்னை முகப்பேரில் இருந்து பல்லவன் சாலையில் உள்ள தேர்வு மையத்துக்கு 11 மணிக்குள் அழைத்துச் சென்றுவிட வேண்டும் என்ற பதற்றத்தில் வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்துள்ளார். எதிர்பாராதவிதமாக சாலையில் மாடு குறுக்கே சென்றதால், தந்தையும், மகனும் தவறி கீழே விழுந்துவிட்டனர். தந்தைக்கு கையில் பலத்தகாயம் ஏற்பட்டநிலையில், மகனுக்கு அதிர்ஷ்டவசமாக எந்த காயமும் ஏற்படவில்லை.

ரத்தகாயத்துடன் தேர்வு மையத்துக்கு வந்த அவருக்கு அங்கு அவசர உதவிக்காக நிறுத்தப்பட்டு இருந்த 108 ஆம்புலன்சில் இருந்த ஊழியர்கள் முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.
Tags:    

Similar News