செய்திகள்
ரேசன் கடையை பொதுமக்கள் முற்றுகை

விண்ணமங்கலம் ரேசன் கடையை பொதுமக்கள் முற்றுகை

Published On 2020-09-09 09:54 GMT   |   Update On 2020-09-09 09:54 GMT
விண்ணமங்கலம் ரேசன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆரணி:

ஆரணியை அடுத்த விண்ணமங்கலம் ஊராட்சியில் உள்ள விண்ணமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ரேசன் கடையில் கடந்த 7-ந் தேதி பொதுமக்களுக்கு விலையில்லா அரிசியை வழங்கினர்.

அப்போது திடீரென மழை பெய்ததால் பொதுமக்கள் பலரும் தங்களது குடும்ப அட்டைகளை கடையில் கொடுத்துவிட்டு நாளை வந்து பொருட்களையும், குடும்ப அட்டையும் பெற்றுக் கொள்கிறோம் என சென்றனர்.

நேற்று அந்த அட்டைதாரர்கள் யாரும் வராதநிலையில் வரிசையில் நின்ற அனைவருக்கும் அரிசி வழங்கப்பட்டு இருப்பு தீர்ந்துவிட்டது.

இந்த நிலையில், பின்னர் வந்தவர்களுக்கு அரிசி தீர்ந்துவிட்டது. பொருள் வந்ததும் பெற்றுச் செல்லுங்கள் என விற்பனையாளர் மூர்த்தி கூறியுள்ளார்.

அதற்கு பொதுமக்கள் நேற்றே அட்டையை உங்களிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டோம், இப்போது வந்தவர்களுக்கு கொடுத்துவிட்டு எங்களுக்கு ஏன் இல்லை என்று சொல்கிறீர்கள் என கேட்டு 50-க்கும் மேற்பட்டோர் ஒன்றுதிரண்டு ரேசன் கடையை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம், ஊராட்சி மன்றத் தலைவர் காந்தி உள்ளிட்டோர் பொதுமக்களிடம் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News