செய்திகள்
கோப்பு படம்.

சென்னையில் டாஸ்மாக் மதுக்கடைகள் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி

Published On 2020-09-03 06:59 GMT   |   Update On 2020-09-03 06:59 GMT
சென்னையில் மது விற்பனை எதிர்பார்த்த அளவு நடைபெறாததால் மேலும் 1 மணி நேரம் கூடுதலாக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

கொரோனா பாதிப்புக்கு இடையே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னை தவிர பிற மாவட்டங்களில் மதுக்கடைகள் அனைத்தும் செயல்பட்டு வந்த நிலையில் சென்னையில் கடந்த மாதம் 18-ந்தேதி திறக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டது. சென்னையில் மட்டும் இரவு 7 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி இருந்தது.

சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக இருந்ததால் மற்ற மாவட்டங்களை விட ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக மதுக்கடைகள் மூடப்பட்டு வந்தன.

இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி முதல் சென்னையில் உள்ள மதுக்கடைகள் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மது விற்பனை எதிர்பார்த்த அளவு நடைபெற வில்லை. பெரும்பாலான தொழிலாளர்கள் வெளியூர்களுக்கு சென்றுவிட்டதால் விற்பனை குறைந்துள்ளது.

தற்போது விற்பனை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் கூடுதலாக விற்பனை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர் ஒருவர் கூறும்போது, ஒரு மணி நேரம் கூட்டப்பட்டிருப்பதால் விற்பனை அதிகரித்துள்ளது. தற்போது வெளி மாநில மற்றும் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சென்னை வரத்தொடங்கி உள்ளனர். இதனால் மது விற்பனை அதிகரித்து வருகிறது என்றார்.

Tags:    

Similar News