செய்திகள்
மறியல்

ராமநாதபுரத்தில் வாலிபர் கொலை: குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் மறியல்

Published On 2020-09-01 11:26 GMT   |   Update On 2020-09-01 11:26 GMT
ராமநாதபுரத்தில் 12 பேர் கொண்ட கும்பல் வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி சென்றது. குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் தாயுமானவர் கோவில் தெருவை சேர்ந்த சுவாமிநாதன் மகன் அருண் பிரகாஷ்(வயது24), இவரது நண்பர் யோகேஸ்வரன் (20) ஆகியோர் நேற்று பிற்பகலில் வசந்த நகர் கிழக்கு பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையம் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 12 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்து 2 பேரையும் சரமாரியாக கத்தியால் குத்தி தப்பிச் சென்றது. இதில் வாலிபர் அருண்பிரகாஷ் உயிரிழந்தார். யோகேஸ்வரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையின் அடிப்படையில் ராமநாதபுரம் சின்னக்கடை அருப்புக்கார தெருவைச் சேர்ந்த செய்யது ஷேக் அப்துல் ரகுமான், பாம்பூரணியை சேர்ந்த இம்ரான்கான், வைகை நகரைச் சேர்ந்த சரவணன், நாகநாதபுரம் காமாட்சி அம்மன் கோவிலைச் சேர்ந்த வெற்றி மற்றும் சதாம், ஹக்கீம்,ராசிக், அசார், அஜிஸ், அஜ்மல், சபிக் ரகுமான், ஹைதர் அலி மரைக்காயர் ஆகிய 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அருண்பிரகாசின் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரி முன்பு இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயசிங், துணை சூப்பிரண்டு வெள்ளத்துரை மற்றும் போலீசார் விரைந்து சென்று சமரசம் செய்தனர். குற்றவாளிகளை ஒரு மணி நேரத்தில் பிடிப்பதாக அவர்கள் உறுதி அளித்ததை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News