செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாள மொழி பேசும் மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

Published On 2020-08-30 06:12 GMT   |   Update On 2020-08-30 06:12 GMT
ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாள மொழி பேசும் மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:

அண்டை மாநிலமான கேரளாவில் மிக முக்கியமான பண்டிகை ஓணம். ஜாதி, மத வேறுபாடின்றி உலகெங்கிலும் உள்ள மலையாளிகள் ஓணம் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். கடந்த 22-ஆம் தேதி தொடங்கி அடுத்த பத்து நாட்களுமே ஓணம் பண்டிகை நாட்களாகக் கருதப்படுகிறது. ஓணம் பண்டிகையின் போது கேரள மக்கள் பூக்களால் கோலமிட்டு தங்களின் பாரம்பரிய உடை அணிந்து இறைவனை வழிபடுவார்கள்.

இந்த நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாள மொழி பேசும் மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

சமத்துவம், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் சாதி, மத பேதமின்றி ஓணம் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றும் மக்கள் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News