செய்திகள்
பிஎஸ்என்எல்

பாபநாசத்தில் 2-வது நாளாக பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

Published On 2020-08-27 10:11 GMT   |   Update On 2020-08-27 10:11 GMT
பாபநாசம் தலைமை பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த ஊழியர்கள் 2-வது நாளாக ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
பாபநாசம்:

ஒப்பந்த ஊழியர்களை வேலையை விட்டு வெளியேற்ற கூடாது, 13 மாத நிலுவை சம்பளத்தை உடனே வழங்க வேண்டும். இ.பிஎஃ.ப், இ.எஸ்.ஐ சட்ட விதிமுறைகளை சலுகைகளை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாபநாசம் தலைமை பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு ஒப்பந்த ஊழியர்கள் 2-வது நாளாக ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

இப்போராட்டத்தில் மாவட்ட தலைவர் மாணிக்கம், கிளை செயலாளர்கள் செல்வராஜ், வீராசாமி, கிளைத் தலைவர் இளஞ்செழியன், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சத்தியவானந்தம், அமைப்பு செயலாளர் முருகானந்தம், மாவட்ட துணை செயலாளர் இளவரசன், செயற்குழு உறுப்பினர்கள் ராஜகோபால், பிரபு, வீரமணி, பாலதிலக்பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பாபநாசம், ராஜகிரி, அய்யம்பேட்டை, கபிஸ்தலம், மெலட்டூர், ஆவூர், ஆலங்குடி, அரித்துவாரமங்கலம் ஆகிய ஊர்களிலிருந்து ஒப்பந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News